ஆளுநர்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது

ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் புதன்கிழமை 27 மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ளது. வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொதுமக்கள் தினம் இடம்பெறவுள்ளது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது Read More »

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் 21 மார்ச் 2019 அன்ற முற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டியில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது Read More »

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை  தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார். ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை Read More »

வடமாகாணத்தின் முன்மாதிரியான செயற்பாடு

வடக்கு மாகாணத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை(PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடை(CBG) மூலம் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூலதன அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் வேலைகள் நிறைவடைந்தும் திறைசேரியிடம் இருந்து கட்டுநிதியானது முழுமையாக கிடைக்கப்பெறாமையினால் ஒப்பந்தகாரர்களிற்கு கொடுப்பனவு செய்யப்பட முடியாமல் இருந்த உறுதிச்சிட்டைகளின் பெறுமதியானது ரூபா 898.4 மில்லியன் ஆகும். இவ்வாறான பெருந்தொகை நிலுவை ஒப்பந்தகாரர்களின் நிதி இயலுமையை பாதித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை கருத்திற் கொண்டு ஒப்பந்தகாரர்களின் இடரினை தீர்ப்பதற்காக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன்

வடமாகாணத்தின் முன்மாதிரியான செயற்பாடு Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 13 மார்ச் 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் 13 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. இந்த பொதுமக்கள் சந்திப்பித்தின்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் எழுத்துமூலம் நேரடியாக இதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கையளித்தனர். மேலும் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக சங்கத்தின் பிரதிநிதிகள்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 13 மார்ச் 2019 Read More »

வட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜெனிவா தொடர்பான தமது கோரிக்கைகளினை ஆளுநருக்கு வழங்கலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனஅவர்கள் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆகியோர் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை

வட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜெனிவா தொடர்பான தமது கோரிக்கைகளினை ஆளுநருக்கு வழங்கலாம். Read More »

இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ”காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம்

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முந்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர் ஒருவரூடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர். ஆனாலும் நேற்று முந்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியாமையின் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை கௌரவ ஆளுநர் அவர்கள் ஒதுக்கியிருந்ததுடன் அதற்காக யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்திருந்தார். ஆனாலும் இறுதி நேரத்திலேயே வடகிழக்கு

இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ”காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம் Read More »

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில்முன்வைக்க வேண்டிய  கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் – வட மாகாண ஆளுநர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர்   பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்  மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களை  ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனஅவர்கள் நியமித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை (13)ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில்முன்வைக்க வேண்டிய  கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் – வட மாகாண ஆளுநர் Read More »

அமெரிக்க மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் 07 மார்ச் 2019 அன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பில் ஆளுநர்

அமெரிக்க மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

இந்து குருக்கள் சபையின் தலைவர் – ஆளுநர் சந்திப்பு

இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 மார்ச் 2019 அன்று முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.  மேலும்  மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஆளுநர் அவர்கள் , இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்து மதங்களினுடைய

இந்து குருக்கள் சபையின் தலைவர் – ஆளுநர் சந்திப்பு Read More »