ஆளுநர்

கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்தரிப்பது குறித்தும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் வீதிச் சமிஞ்சை விளக்குகளைப் பொருத்துவது குறித்தும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை (11.02.2026) மாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடலில் […]

கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது. Read More »

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வளம் நிறைந்தும் வறுமையில் முதலிடம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக மிகப் பெரிய அபிவிருத்தியை அடையும். அதற்கான அடிப்படைத் திட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (11.02.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் Read More »

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது. நான் யாழ். மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தில் எவையெல்லாம் சாத்தியமற்ற கனவுகளாக இருந்தனவோ, அவை இன்று இக் காலப்பகுதியில் நனவாகி வருகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களின்

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு Read More »

மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் புதிய பணிப்புரைக்கு அமைவாக, மாகாண சபைகளுக்குரிய வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் தேவைகளை நிவர்த்தி செய்ய, மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று

மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை Read More »

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கும் விரிவாக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். பாடசாலை மாணவர்களின் உளநல மேம்பாடு தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

பாடசாலை மாணவர்களிடம் மறைமுகமான நிதி அறவீடுகளைக் கண்காணித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளபோதும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு

பாடசாலை மாணவர்களிடம் மறைமுகமான நிதி அறவீடுகளைக் கண்காணித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட

மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் Read More »

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது கட்டாயமாகும், – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது கட்டாயமாகும், – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல். Read More »

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று திங்கட் கிழமை (09.02.2026) நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம் Read More »

சிவபெருமானின் ஆனந்த மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

தமிழரின் பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கலை வடிவங்களில் பரதநாட்டியம் முதன்மையானது. சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் இயக்குநர் திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் மாணவியும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் தரம்

சிவபெருமானின் ஆனந்த மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »