கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர்
பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்குச் சில துறைகளிலுள்ள நேர்மையீனமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், மிக விரைவில் அவர்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘பனை வளம் நிலையான வாழ்வின் பலம்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியன இணைந்து […]
