இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். – கௌரவ ஆளுநர்
இன்று திறக்கப்பட்டுள்ள இந்த வீதி வெறுமனே ஒரு போக்குவரத்துப் பாதையாக அமையாது, எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பையும், இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையிலான ஆழமான கலாசாரப் பிணைப்பையும் நினைவூட்டும் வரலாற்றுச் சுவடாகவே நிலைத்திருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவர் வாழ்ந்து சேவையாற்றிய மண்ணில், அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் தான் மட்டற்ற […]
