இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். நோயாளர் விடுதியை பார்வையிட்ட கௌரவ ஆளுநர், முதலாவது நோயாளரையும் விடுதியில் அனுமதித்தார். இதன்போது நிகழ்வின் பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய கௌரவ ஆளுநர், வடக்கு […]
