npc2018z

வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

வடமாகாணத்தில் உள்ள 15 குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு […]

வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு Read More »

சாட்டி பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

சாட்டி பிரதேசத்திற்கு இன்று காலை (18)விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் முருங்கை பயிர்ச்செய்கையை தனது காணியில் மேற்கொள்ளும் சசிகரன் என்பவருடன் சுமூகமாக கலந்துரையாடினார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

சாட்டி பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

சாட்டி கடற்கரைக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சாட்டி கடற்கரைக்கு இன்று (18) காலை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். பொதுமக்கள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாப்பகுதியான சாட்டி கடற்கரையினை சுத்தமாக பேணுமாறும் இப்பகுதியில் காணப்படும் பொதுமலசலகூடங்கள் பொதுமக்கள் பாவனைக்கு உகந்தவகையில் மாற்றியமைக்குமாறும் வேலணைப் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கும் ஆளுநர் அவர்கள் பணிப்புரை வழங்கினார். -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

சாட்டி கடற்கரைக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் அக்டோபர் 7 இல் ஆரம்பம்

வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் எதிர்வரும் அக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சாலை பாதுகாப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வடமாகாணம் முழுவதும்

வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் அக்டோபர் 7 இல் ஆரம்பம் Read More »

வடக்கு வட்டமேசை -‘வடமாகாணத்தில்_துடுப்பாட்ட_அபிவிருத்தியும்_தற்போதைய_பின்னடைவிற்கான_காரணங்களும்’

வடக்கு வட்டமேசை’ (‘Northern_Province_Round_Table’) கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 19 செப்ரெம்பர் 2019 அன்று மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இம்முறை இடம்பெறவுள்ள வட்ட மேசை கலந்துரையாடலில் ‘வடமாகாணத்தில்_துடுப்பாட்ட_அபிவிருத்தியும்_தற்போதைய_பின்னடைவிற்கான_காரணங்களும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது

வடக்கு வட்டமேசை -‘வடமாகாணத்தில்_துடுப்பாட்ட_அபிவிருத்தியும்_தற்போதைய_பின்னடைவிற்கான_காரணங்களும்’ Read More »

மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர்

மனிதன் இப்பொழுது விண்தொட்டிருக்கின்றான் ஆனால் மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை என்று வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான விவசாயக்கண்காட்சி 2019 இல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார் . ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளாகத்தில் ஆளுநர் தலைமையில் இன்று ஆரம்பமான விவசாய கண்காட்சி நிகழ்வில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில், விவசாயிகள் சேற்றிலே

மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர் Read More »

ஆளுநரின் அறிவுறுத்தலில் சாவகச்சேரி பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்

பொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர். தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது சட்டத்திற்கமைவாக உணவகங்கள் இயங்குகின்றனவா என்பதுடன் உணவகங்களின் தரம் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது 11 உணவகங்கள்

ஆளுநரின் அறிவுறுத்தலில் சாவகச்சேரி பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும்

யாழ்ப்பாணம் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் “காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும் Read More »

மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம்

வடமாகாண தொழிற்திணைக்களம் ,தேசிய அருங்கலைகள் பேரவை ,புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியன மத்திய வங்கியுடன் இணைந்து நடாத்தும் மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 14 செப்ரெம்பர் 2019 அன்று மாலை விஜயம் செய்தார் . கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்யும் வடமாகாண உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக யாழ் மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமான இந்த கைத்தொழில் கண்காட்சி நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம் Read More »

சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2019 துடுப்பாட்டப் போட்டியின் பிரதம அதிதிகளாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர். வருடாந்தம் இடம்பெறும் இந்த துடுப்பாட்ட போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் 14 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு  

சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு Read More »