யாழ்ப்பாணம் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் “காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதியாக கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண விவசாயத் திணைக்களம் கீழ் வரும் நிறுவனங்களுடன் இணைந்து இக் கண்காட்சியினை ஒழுங்கமைத்துள்ளது.
நிறுவனங்கள் விபரம் |
- மத்திய விவசாயத் திணைக்களம்
- கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் (வ.மா)
- நீர்ப்பாசனத் திணைக்களம் (வ.மா)
- கமநல அபிவிருத்தித் திணைக்களம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சுதேச மருத்துவத் திணைக்களம்(வ.மா)
- தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை
- தென்னை ஆராய்ச்சி நிறுவனம்
- தென்னை அபிவிருத்தி அதிகார சபை
- பனை அபிவிருத்திச் சபை
- யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துடன் தொடர்புடைய துறைகள்
- இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்
- கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை
- இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை
- விவசாயத்துடன்தொடர்புடைய தனியார் கம்பனிகள்
- வங்கிகள்
- தனியார் நாற்றுமேடையாளர்கள்
- சமூகமட்ட அமைப்புக்கள்
- பனை ஆராய்ச்சி நிலையம்
|
காட்சிப்படுத்தப்படவுள்ள விவசாய தொழில்லுட்பங்கள் |
- விவசாய உற்பத்திப் புள்ளிவிபரங்களும் தகவல்களும்
- நெல் உற்பத்தியில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
- இலைக்கறிவகைகள், தானியங்கள், அவரைப்பயிர்கள், எண்ணெய்ப்பயிர்கள், பழப்பயிர்கள்
- சேதன விவசாயம்
- ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை
- சிறுதானியப் பயிர்ச்செய்கையை மேம்படுத்தல்
- கொள்கலன்களில் மரக்கறிப் பயிர்ச்செய்கை.
- வரட்சியான காலங்களில் வலை வீடுகளில் மரக்கறிப் பயிர்ச்செய்கை
- வீதிமுறைப் பயிர்ச் செய்கை
- காளான் செய்கை
- அறுவடைக்குப் பின்னான இழப்புக்களைக் குறைத்தலும் தரத்தினை மேம்படுத்தலும்
- பண்ணை இயந்திரங்களின் பாவனையை மேம்படுத்தல்
- விவசாய ஆராய்ச்சிச் செயற்பாடுகள்
- தென்னை அபிவிருத்தி
- பனைவள அபிவிருத்தி
- மூலிகைத் தாவர விருத்தியும் பயன்பாடும்
- சிறு ஏற்றுமதிப் பயிர்கள்
- இலங்கை மண்வளம், மண் சம்பந்தமான பிரச்சனைக்குரிய தீர்வுகள்
- உள்நாட்டு மரக்கறிகள், மேல்நாட்டு மரக்கறிகள், கிழங்குப்பயிர்கள்,
- உயர்தர நாற்றுக்களின் உற்பத்தி
- நிலைபேறான சேதன வீட்டுத்தோட்டம்
- மண்ணின்றிய பயிர்ச்செய்கை
- ஊடு பயிர்ச்செய்கை
- நகர்ப்புற வீட்டுத்தோட்டம்
- நீர்முகாமைத்துவமும் நிலத்தடிநீர் சேமிப்பும்
- பயிர்ப்பாதுகாப்பு செயல்முறைகள்
- தேனீ வளர்ப்பு
- உற்பத்திப் பொருட்களின் பெறுமானத்தை அதிகரித்தல்
- விலங்கு வேளாண்மை
- பல்கலைக் கழகத்தின் விவசாய புத்தாக்கங்கள்
- மரமுந்திரிகை அபிவிருத்தி
- அலங்கார தாவரவளர்ப்பு
- நஞ்சற்ற போசணை மிகு உணவுகள்
- காலநிலையினை அளவிடும் கருவிகளும் அவதானங்களும்
|
விற்பனை |
- விவசாயம் தொடர்பான பிரசுரங்கள் பழமரக் கன்றுகள், தென்னை, மற்றைய மரக்கன்றுகள் மற்றும் அலங்காரநாற்றுகள்
- மரக்கறி விதைகள், தரமான மரக்கறி நாற்றுக்கள்
- பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகள்
- பாரம்பரிய உணவுகள்
- விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் கம்பனிகளின் உற்பத்திகள் (பண்ணை இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றன)
|
பொதுமக்கள், விவசாயிகள், கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளம் விவசாயிகள் கழகங்களின் உறுப்பினர்கள், கிராமஅபிவிருத்தி சங்கங்களின்; உறுப்பினர்கள், மாதர் கிராமஅபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.
அஞ்சனாதேவி சிறீரங்கன்
பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்
யாழ்ப்பாணம்
Post Views: 669