npc2018z

வடமாகாண பாடசாலைகளில் உள்ள வகுப்பு பிரிவுகளில் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது – ஆளுநர்

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட […]

வடமாகாண பாடசாலைகளில் உள்ள வகுப்பு பிரிவுகளில் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது – ஆளுநர் Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தும்பளை மேற்கு மற்றும் வல்லிபுரம், புலோலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பனைசார் பொருட்களின் உற்பத்தி மற்றும் பலகார வகைகளைச் செய்யும் ‘திருமால் மகளிர் செயற்பாட்டுக்குழு’, வல்லிபுரம், புலோலி அவர்களுக்கு ரூபா.178,591.50 பெறுமதியான இயந்திரங்கள், பாத்திரங்கள் மற்றும் தளபாடங்களும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் செய்யும் ‘அபிராமி சமூகமட்ட மகளிர் அமைப்பு’, தும்பளை மேற்கு, பருத்தித்துறை அவர்களுக்கு

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு Read More »

கேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கேப்பாபிலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 20 செப்ரெம்பர் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத கேப்பாபிலவு மக்களின் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்கள் தங்களது காணிகளை அடையாளங்காண்பதற்காக இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவில் காணிகளை இனங்கண்டு அவை இராணுவத்திற்கு தேவையானதாக அமையின் அவற்றுக்கு இதே வளம் கொண்ட

கேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் Read More »

ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்

ஆலங்குளம் பிரதேச மக்கள் , கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளை தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 20 செப்ரெம்பர் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 74 ஏக்கருக்கு சொந்தமான 16 பேர் தமது சொந்த காணிகளே தேவை என்றும் , 44.5 ஏக்கர் காணியின் 30 உரிமையாளர்கள் தமக்கு மாற்றுக்காணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல் Read More »

யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம் 

திரும்பவும் இந்த தேசத்தை கட்டி எழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனிதநேயத்தைடனும் கட்டி எழுப்பவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்அவர்கள் தெரிவித்தார் . அரச புகைப்பட ஆலோசனைக்குழு , வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சு ,இலங்கைக்கலைக் கழகம் , கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சியை கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் 20 செப்ரெம்பர் 2019 அன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில்

யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம்  Read More »

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவதளபதிக்குமிடையில் சந்திப்பு

23ஆவது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி அவர்கள் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 அதிமேதகு ஜனாதிபதி

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவதளபதிக்குமிடையில் சந்திப்பு Read More »

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் தொடர்பிலான கலந்துரையாடல் 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் இதற்கான போட்டிகள் மிகவிரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் இப்போட்டியில் பங்குபற்றும் கழகங்களுக்கான பரிசுத்தொகையை ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி தொடர்பில் கலந்துரையாடல் Read More »

சிற்றூர்தி உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் உள்ள சிற்றூர்திகளின் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனைக்கமைய ஆளுநரின் செயலாளர் , வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது யாழ் மாவட்டத்தில் சிற்றூர்தியின் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது சிற்றூர்தி பயணத்தின்போது

சிற்றூர்தி உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல் Read More »

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கனகராயன்குளம் கரப்புக்குத்தி வீதிப்பாலமானது வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா வடக்கு பிரதேசசiபின் தவிசாளர் ச.தணிகாசலம் அவர்களால் 18 செப்ரெம்பர் 2019 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது Read More »

மறவன்புலவு பிரதேச மக்கள் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் மறவன்புலவு பிரதேச மக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சின் செயலகத்தில் இன்று (18) இடம்பெற்றது. மறவன்புலவு மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்காற்றாலைக்கு எதிராக மறவன்புலவு மக்களால் இன்று முதலமைச்சு செயலகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தையடுத்து கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் ஐவர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச

மறவன்புலவு பிரதேச மக்கள் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு Read More »