npc2018z

பாடசாலைகள் வழமைபோல் இயங்கும்- ஊடக அறிக்கை

வட மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் எதுவும் இயங்காது என்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பது தொடர்பில் ஆளுநரின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையானதல்ல எனவும் வடமாகாணத்தின் சகல பாடசாலைகளும் திங்கட்கிழமை வழமைபோல் இயங்குமெனவும் வட மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு  

பாடசாலைகள் வழமைபோல் இயங்கும்- ஊடக அறிக்கை Read More »

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாத்தீனியம் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா விவசாயக் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக கடந்த 10.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இதன்போது பொறுப்பான பாத்தீனியம் உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மேற்படி பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி Read More »

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு உளுக்குளம் விவசாயபோதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதி அன்று தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. இதன் போது தேனீ குடித்தொகையை பேணுதல், பிரித்தல், பீடைத் தகக்கங்களிலிருந்து பாதுகாத்தல் போன்றன தொடர்பான செயன்முறை விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தேனீ வளர்பானது வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் மிகக் குறைந்தளவிலான முயற்சியாளர்களே மேற்படி தேனீவளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் மேலும் முயற்சியாளர்களை

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி Read More »

காணி விடுவிப்பு சம்பந்தமான ஊடக அறிக்கை

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஏற்கனவே கௌரவ ஆளுநர் அவர்களினால் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுக்கொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தின்

காணி விடுவிப்பு சம்பந்தமான ஊடக அறிக்கை Read More »

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் – ஆளுநர்

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமென்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் இது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இலஞ்ச ஊழலினை வடமாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் எண்ணக்கருவிற்கு அமைய இலஞ்ச ஊழல் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பவை தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் செயலமர்வு 13 செப்ரெம்பர் 2019

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் – ஆளுநர் Read More »

படைத்தரப்பு ,பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பு பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 12 செப்ரெம்பர் 2019 அன்று கலந்துரையாடல் இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே ஆளுநர் அவர்களின் இந்த கலந்துரையாடல் இன்று முதற்கட்டமாக நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது படைத்தரப்பு , பொலிஸார் , திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் ஒவ்வொருவர்

படைத்தரப்பு ,பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

வரலாறு எமக்கு சொல்லும் பாடத்திலேதான் நம் எதிர்காலம் உருவாகும் – ஆளுநர்

நாங்கள் போர்கண்ட தேசம். நீங்கள் போருக்கு பின்னால் பிறந்த பிள்ளைகள். வரலாறு எமக்கு சொல்லும் பாடத்திலேதான் நம் எதிர்காலம் உருவாகும் என்று நான் நம்புகின்றேன். வரலாறு எவ்வளவு கசப்பாக இருந்தாலும் இனிவருகின்ற எதிர்காலத்தை நாம் நன்மையாக அமைக்கவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி 12 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் ஆளுநர் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரலாறு எமக்கு சொல்லும் பாடத்திலேதான் நம் எதிர்காலம் உருவாகும் – ஆளுநர் Read More »

கிளி/முருகானந்தா ஆரம்ப வித்தியாலய புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 12 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 2018 டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையின் புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 5.85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தின் பொறியியற் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் ,

கிளி/முருகானந்தா ஆரம்ப வித்தியாலய புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

 மொழிபெயர்ப்பாளர்கள் நியமனம்   

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் வடமாகாணசபைக்கு நியமிக்கப்பட்ட  மொழிபெயர்ப்பாளர்கள்   4 பேருக்கான நியமனங்கள் கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நேற்று (11) பிற்பகல் வழங்கப்பட்டது .

 மொழிபெயர்ப்பாளர்கள் நியமனம்    Read More »

‘வடக்கின் தங்கக்குரல்’ – விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு

விண்ணப்ப முடிவுத்திகதி செப்டம்பர் 30,2019 இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வட மாகாண இளைஞர் யுவதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கின் தங்கக்குரல் நிகழ்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் தங்கக்குரல் 2019 இற்கான தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் வடமாகாண இளைஞர் யுவதிகளை இசைத்துறையில் ஊக்குவிக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில்

‘வடக்கின் தங்கக்குரல்’ – விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு Read More »