npc2018z

சௌபாக்கியா கடன்திட்டம் 2021

அரசாங்கத்தின் சௌபாக்கியா இலகு கடன் திட்டத்திற்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்ட எட்டு பலநோக்கு சங்கங்களுக்குரிய கடன் வழங்கும் திட்டம் 13 பெப்பிரவரி 2021 அன்று வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள்இ வரலாற்றில் முதற்தடவையாக பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு நெற்கொள்வனவு செய்வதற்காக பெரியளவு தொகை மிகக் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]

சௌபாக்கியா கடன்திட்டம் 2021 Read More »

வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும்

கமத்தொழில் ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு சஷீந்திர ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண கல்வித்திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து நடத்தும் வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் மற்றும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் கிளி/வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலையில் 15 பெப்பிரவரி 2021 அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ

வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் Read More »

வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழா

யாழ் மாவட்டத்தில் உடுவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 09.02.2021 ஆம் திகதி  நடை பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்,கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மருதனார்மட விவசாயக்கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். விதையிடும் கருவியை பயன்படுத்தி நெல்லை வரிசையில் விதைத்து பயிர்செய்கை மேற்கொள்வதன்

வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழா Read More »

பற்றிக்(Batik) பயிற்சி நிலையம் புங்குடுதீவில் திறந்து வைக்கப்பட்டது

“சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைக்கு அமைவாக “உழைக்கும் நாடு, உற்பத்தி செய்யும் குடிமகன், மகிழ்சியான குடும்பம்” என்ற தொனிப்பொருளில் 200 பற்றிக் கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட “பற்றிக் பயிற்சி நிலையம் -புங்குடுதீவு யாழ்ப்பாணம்” திறப்புவிழா மற்றும் ஆரம்ப நிகழ்வு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் பாராளுமன்ற

பற்றிக்(Batik) பயிற்சி நிலையம் புங்குடுதீவில் திறந்து வைக்கப்பட்டது Read More »

வடமாகாண கல்வித்துறைசார் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

வடமாகாணகல்வித்துறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சிமாவட்ட யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் 05 பெப்பிரவரி 2021 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கௌரவ கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி வலயம் இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டமைக்கான அனுமதிக்கடித்தினையையும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு திறன் வகுப்பறை இற்கான கொரியநாட்டின் அன்பளிப்பான 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுக்குரிய காசோலையையும் கௌரவ அமைச்சர் கௌரவ வடமாகாண ஆளுநரிடம் கையளித்தார். இவ்விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு, வடமாகாண கல்விதுறைசார்

வடமாகாண கல்வித்துறைசார் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல். Read More »

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வானது இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலக 73வது சுதந்திர தின கொண்டாடம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், நீண்டகாலத்திற்கு பின் ஒரு மாவட்டத்தின் சுதந்திர தின நிகழ்வில் தனக்கு பங்குகொள்ள

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம் Read More »

நெல் உற்பத்தியினையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்கான கள விஜயம்

வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் கலாநிதி. ஜயந்த அவர்களும் இணைந்து மன்னார் மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை 03.01.2021 ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர். இக்கள விஜயத்தில் சேனாநாயக்க உதவி விவசாய பணிப்பாளர் கலாநிதி ரீ.கே. இலங்ககோன், மண் விசேடத்துநர் கலாநிதி. டபிள்யூ.எம்.யூ.கே ரட்னாயக்க, இனவிருத்தி விசேடத்துநர் கலாநிதி பாகிம், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் சி.சிவநேசன் மற்றும் மாகாண விவசாயபணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட பிரதி

நெல் உற்பத்தியினையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்கான கள விஜயம் Read More »

நாட்டின் 73 வது சுதந்திர தினம் பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாட்டப்பட்டது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தினம் கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் 04 பெப்ரவரி 2021 அன்று கொண்டாடப்பட்டது. தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் சுற்றுநிருபம் 24/2020 இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலின்படி, பிரதி பிரதம செயலாளர் திரு.ஆர்.பத்மநாதன் அவர்கள் தேசியக் கொடியை மு.ப. 8:00 மணிக்கு ஏற்றிவைத்தார். பின்னர் ”நாட்டிற்கு சுதந்திரத்தின் முக்கியத்துவம்” எனும் தொனிப் பொருளில் உரையாற்றினார். நாட்டின் 73 வது சுதந்திர

நாட்டின் 73 வது சுதந்திர தினம் பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாட்டப்பட்டது Read More »

“ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான “ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது யாழ் நெடுங்குளம் கிராமத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், யாழ்ப்பாண அரச அதிபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் நண்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் பிரதேச செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின்

“ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்டம் -2021

2021ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது 02 பெப்பிரவரி 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கயன் இராமநாதன் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கொவிட்-19 சுகாதார நடைமுறை விதிகளுக்கமைய இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்டம் -2021 Read More »