Balasingam Kajenderan

கால்நடைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவும். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு கௌரவ ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிமாவட்டங்களுக்கு கால் நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரிய சட்ட விதிகளை […]

கால்நடைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவும். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை Read More »

சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், கௌரவ ஆளுநர் அவர்களுக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று (19/04/2024) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில்

சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

சுற்றுலாப் பயணிகளுக்குவீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையைதயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18/04/2024) விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகளுக்குவீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையைதயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இணைத் தலைவர்களான கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (18/04/2024) நடைபெற்றது. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் பார்வை ஆய்வு அட்டைகள் இன்று (17/04/2024) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட செயல்திட்டத்திற்கான பார்வை ஆய்வு அட்டைகளை, Vision care நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது Read More »

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் இன்று (15/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள்,

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் Read More »

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்

தமிழ் மக்களின் பாரம்பரியம், தொன்மை என்பவற்றுக்கு அமைய சித்திரை 14 ஆம் நாள் புது வருடம் பிறக்கிறது. அதற்கமைய இந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி குரோதி எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சாந்தியும், சமாதானமும் மேலோங்கி வறுமைகள் நீங்கி எல்லா வளங்களுடனும் அனைவரும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேதினத்தில் சிங்கள மக்களும் தங்களின் புதுவருடப் பிறப்பை கொண்டாடுகின்றனர். பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள் Read More »

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிய திட்டத்தின் ஊடாக 2023 ஆம்  ஆண்டு வழங்கப்பட்ட மஞ்சள் விதை கிழங்குகளை பெற்றுக்கொண்ட பெரியமடு விவசாய போதனாசிரியர் பிரிவில் பெரியமடு கிழக்கு கிராமத்தில் உள்ள விவசாயி திரு. யு. ஆ. சியான் மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திரு. ஊ. பசீலன் அவர்களின் விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக மஞ்சள் செய்கையில் ஈடுபட்டிருந்தார். 7 மாதங்களின் பின்னர் அறுவடைக்கு தயாரான நிலையில் மேற்படி  மஞ்சள் செய்கையின் பலாபலன்களை ஏனைய விவசாயிகளிற்கும்

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம் Read More »

இலவச சித்த மருத்துவ முகாம்

“எல்லோர்க்கும் சித்த மருத்துவம்” என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் ,ந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 16.03.2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது.இந்நிகழ்வில் யாழ் ,ந்தியத் துணைத்தூதரக உயர் அதிகாரி, வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர்,

இலவச சித்த மருத்துவ முகாம் Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2024

2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 14.03.2024 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் ஆரோக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் தொடர்பாக சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கைப்பானங்கள் மற்றும் மூலிகைக் கன்றுகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பெண் வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை ஆகியோர் கௌரவிக்கப்பட்டு அவர்களிற்கு

சர்வதேச மகளிர்தினம் – 2024 Read More »