யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்
யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும் இடையிலான சந்திப்பு 11.12.2024 அன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. உள்ளூராட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் தமது வேலைத் திட்டம் தொடர்பாக விரிவாக வதிவிடப்பிரதிநிதியால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகளை நிகழ்நிலைப்படுத்துவதன் (Online service) தேவைப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சாதகமான நிலைமைகள் தொடர்பிலும் குறிப்பிட்ட ஆளுநர் வடக்கு மாகாணத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். […]
யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல் Read More »
