Balasingam Kajenderan

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 1500 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவர்களை மீள் குடியேற்றுவதற்கான உரிய […]

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் Read More »

எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். – அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (25/06/2024) திறந்து வைத்தார். அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்த கௌரவ ஆளுநர், உணவகத்தின் விற்பனை செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்ததுடன், வலிகாமம் மேற்கு பகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைத்தார். உள்ளூர் கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்

எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். – அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (25/06/2024) திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய  சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கான  தகவல்  தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு Read More »

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்புவிழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார்.

நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஏற்பாட்டில் தனியார் விடுதியொன்றில் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் நெல்லியடியை சேர்ந்த 15 வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்வி, மருத்துவம், சமயம், சமூக சேவைகளில் ஈடுபடும் 04 சான்றோர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான நினைவு கேடயங்கள் கௌரவ ஆளுநரால் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் நெல்லியடி பகுதியை சேர்ந்த 12 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.    

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்புவிழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார். Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்று (19/06/2024) நிறைவடைந்தது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இந்த முகாம்  நிறைவுறுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களும், யாப்பாணத்திற்கான  இந்திய துணை தூதுவரும் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் முறையினை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செயற்கை அவயங்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தை

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது Read More »

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்,  இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட்  நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம்

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல் Read More »

பண்பாட்டலுவல்கள் அலகின் கலைஞர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகானது வடமாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலங்களினூடாகவும் கலாசார அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.  இச்செயற்திட்டமானது ஐனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பிரதேச செயலகங்களினூடாக நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகினூடாக பிரதேச செயலகங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு கலைஞர் ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் கலாசார உத்தியோகத்தர் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. கலைஞர்களை வலுப்படுத்தும் செயல்திட்டத்தின் முதற்கட்டமாக கலைஞர் ஒன்றுகூடலானது முன்னெடுக்கப்பட்டது. இவ் ஒன்றுகூடலானது பிரதேச கலைஞர்களின்

பண்பாட்டலுவல்கள் அலகின் கலைஞர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள் Read More »

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (07/06/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் , எதிர்கால திட்ட முன்மொழிவுகள்,

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (05/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர்  செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி ), மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு Read More »

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்கவும்

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் இன்றைய (03/06/2024) தினம் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நாளை பாடசாலை தினத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்கவும் Read More »