UNDP ஆல் நடத்தப்படும் வடக்கு மாகாண சுற்றுலாத் தேவைகளின் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் (UNDP) நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (25.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான இடம். பல முதலீட்டாளர்கள் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்காக வருகின்றனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கு எங்களுக்கு உதவ இருக்கின்றது. வெளிவிவகார வளத்திணைக்களம் […]
