பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகள் – கௌரவ ஆளுநர்
தரமான பொருட்களை உற்பத்தி செய்தாலும், அதனைப் பொதியிடுவது சந்தைப்படுத்துவதிலேயே அந்தப் பொருட்களுக்கான கேள்வி தங்கியுள்ளது. எனவே, இவை தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் உங்களை அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) ஏற்பாட்டில் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்னான பயிற்சிப்பட்டறை திண்ணை ஹோட்டலில் இன்று புதன்கிழமை (23.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, […]
