சுகாதார அமைச்சின் கீழ், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்தக் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது
வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமைக்கப்பட்டால் மட்டுமே, ஐந்து மாவட்ட மக்களும் அதன் நன்மைகளைச் சமமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். எனவே, மாங்குளத்தில் இத்திணைக்களத்துக்காக ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ், 2025ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் […]
