“40 வருடங்களின் பின் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு மீண்டும் உயிர்; புலம்பெயர் உறவுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்!” – அடிக்கல் நடுகை விழாவில் ஆளுநர் அழைப்பு
அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது உங்களுக்கான மிகச் சிறந்ததொரு வாய்ப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார். போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு […]
