வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை, மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை
வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அவரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, தெளிவுபடுத்தல்களுக்காக ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக […]