Balasingam Kajenderan

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19/05/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு பிரிவினர், பொலிசார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், […]

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும்

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு Read More »

குருநகர் கரையோரவீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கௌரவ ஆளுநரும் கலந்துகொண்டார்

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு செயற்பாடும் குருநகர் பகுதியில் இன்று (17/05/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், வட மாகாண  உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கரையோர தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர். குருநகர் 26 ஆம் வட்டார கரையோர வீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்தை யாழ்ப்பாணம் முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு கழிவுகளை வீதியில் வீசுவதை தடுக்கும் வகையில், அவற்றை தரம்பிரித்து சேகரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து

குருநகர் கரையோரவீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கௌரவ ஆளுநரும் கலந்துகொண்டார் Read More »

முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல்திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்குஇன்று அடிக்கல் நாட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன்,  மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு இன்று (15/05/2024)  அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிலத்தடி நீரினால் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதிகளில் மூன்று வீதமான  மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக பாதிப்புக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும்

முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல்திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்குஇன்று அடிக்கல் நாட்டல் Read More »

பாலியாறு நீர்த்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் இன்று (15/05/2024) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பாதாதை வடக்கு

பாலியாறு நீர்த்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் Read More »

வட மாகாணத்தைச்சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு  மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் (14/05/2024) இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட குழுவினரும், ஆளுநரின் உதவிச் செயலாளர், உள்ளுராட்சித் திணைக்கள பணிப்பாளர், மாகாண கலாசார உதவிப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர். உள்ளூர் எழுத்தாளர்களின் தற்போதைய நிலைமை, பதிப்பகங்கள், அச்சகங்களின் செயற்பாடுகள், நூல் பதிப்பு மற்றும் விற்பனை, கலை, இலக்கியத் துறையின் சமகாலப்போக்கு உள்ளிட்ட பல

வட மாகாணத்தைச்சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024  பளுதூக்கல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான பளுதூக்கல்  போட்டி கடந்த 2024.05.12 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான , பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன. மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில்

மாகாண விளையாட்டு விழா – 2024  பளுதூக்கல் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கராத்தே போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கராத்தே போட்டி கடந்த 2024.05.11 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.00 மணியளவில் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டு நிறைவு பெற்றது. ,ந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம

மாகாண விளையாட்டு விழா – 2024 கராத்தே போட்டி Read More »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 07 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு  அமைவாக, இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. பொன்னாலை –  பருத்தித்துறை கடற்கரை வீதியில்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன Read More »

இரு நூல்களின்  நூல் வெளியீட்டு வைபவம் -2024

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியீடு செய்யும் திரு. கணேசஐயர் சௌந்தரராஜன் அவர்களின் “யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்” மற்றும் திரு. நவரத்தினம் பரமேஸ்வரன் அவர்களின் “யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு வைபவமானது 2024.05.03 வெள்ளிக்கிழமை காலை 09.15 மணியளவில் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி,

இரு நூல்களின்  நூல் வெளியீட்டு வைபவம் -2024 Read More »