வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும்
வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் 2023.10.15 அன்று நடைபெற்ற விவசாயம் தொடர்பான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் கூறியிருந்தார். வடமாகாணத்தில் நெற்செய்கைக்கு மட்டுமன்றி மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாய திணைக்களம் அதிகூடிய ஆதரவை வழங்கும் எனவும் விவசாய அமைச்சர் கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாய செயற்பாடுகள் பெருமளவு பங்களிப்பதாகவும், வாழ்வாதாரத்தை […]
வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும் Read More »
