October 6, 2026

உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கை – அறுவடை விழா

மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ், உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல்விழா 02.10.2026 அன்று திரு. க. யினீசன் அவர்களின் தோட்டத்தில் நடைபெற்றது. இச்செய்கையானது நுண்நீர்ப்பாசன முறையின் கீழ் உயர்மட்டப் பாத்திகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கையின் நவீன தொழில்நுட்பங்கள், நுண்நீர்ப்பாசனத்தின் பயன்பாடு மற்றும் உயர்மட்டப் பாத்தி முறையின் நன்மைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர், விவசாயப் […]

உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கை – அறுவடை விழா Read More »

199 வேலைத்திட்டங்கள் ரூ.488.169 மில்லியன் செலவில் முன்னெடுப்பு – பணிகளை துரிதப்படுத்த ஆளுநர் வலியுறுத்தல்.

வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிபம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். குறித்த அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தொழிற்துறைத் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

199 வேலைத்திட்டங்கள் ரூ.488.169 மில்லியன் செலவில் முன்னெடுப்பு – பணிகளை துரிதப்படுத்த ஆளுநர் வலியுறுத்தல். Read More »