October 2, 2026

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தின் திறந்தவெளி அரங்கில் 2026 ஆம் ஆண்டுக்கான முதியோர் வார நிகழ்வுகள் 01 ஒக்டோபர் 2026  அன்று சிறப்புற ஆரம்பமாகின. 2026 ஆம் ஆண்டின் சர்வதேச முதியோர் தினத்திற்கான “நீண்ட ஆயுளின் யுகம்: நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புகளை மறுசிந்தனை செய்தல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்வானது வடக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், […]

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்… Read More »

ஆளுநர் நா.வேதநாயகனின் முயற்சியால் புலிக்குளத்தில் துருசு அமைக்கும் பணி ஆரம்பம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாக விவசாய பீடத்தின் நீண்டநாள் தேவைக்கு நடைமுறைத் தீர்வு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நீண்டநாள் கனவாக இருந்து வந்த விடயம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சியால் சாத்தியமாகியுள்ளமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தெரிவித்தார். புலிக்குளத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு துருசு அமைக்கும் பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (30.09.2026) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாகக்

ஆளுநர் நா.வேதநாயகனின் முயற்சியால் புலிக்குளத்தில் துருசு அமைக்கும் பணி ஆரம்பம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாக விவசாய பீடத்தின் நீண்டநாள் தேவைக்கு நடைமுறைத் தீர்வு. Read More »

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் வடக்கு மாகாணம் நாட்டில் முன்னணியில் – ஆளுநர்

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வடக்கு மாகாணம் இன்று நாட்டில் முன்னணி மாகாணமாகத் திகழ்கிறது. இந்த முன்னேற்றம் எந்தவொரு ஓர் அலுவலகத்தின் சாதனையுமல்ல, மாவட்டச் செயலர்கள் முதல் கிராம அலுவலர்கள் வரை திட்டமிடல், சமுர்த்தி, சமூக சேவை மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகளில் களத்தில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளினதும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பெறுபேறாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண தேசிய

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் வடக்கு மாகாணம் நாட்டில் முன்னணியில் – ஆளுநர் Read More »