September 26, 2026

“தலைமன்னாரிலிருந்து எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிடும் வாய்ப்பு வடக்கு மாகாண சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்” – ஆளுநர்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாவிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக அமையும். இதன் ஊடாக மன்னார் மாவட்டத்துக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை மன்றம் […]

“தலைமன்னாரிலிருந்து எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிடும் வாய்ப்பு வடக்கு மாகாண சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்” – ஆளுநர் Read More »

மன்னார் மாவட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவம், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் நேரில் ஆய்வு

மன்னார் நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம், மன்னார் பாலத்தடி சுற்றுலாப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நீலாசேனை மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இக்களப் பயணத்தில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், மன்னார் நகரப் பிரதேச செயலர் கே.காந்தீபன் மற்றும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சாஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவம், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் நேரில் ஆய்வு Read More »

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிட சுற்றுலா படகுச் சேவை

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் நேரில் சென்று பார்வையிடும் வகையில் சுற்றுலா படகுச் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரீட்சார்த்தப் படகுப் பயணம் இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன், எதிர்வரும் 28.09.2026 திங்கட்கிழமை முதல் சுற்றுலாவிகளுக்கான படகுச் சேவையை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிட சுற்றுலா படகுச் சேவை Read More »

அக்கரை மற்றும் காங்கேசன்துறை கடற்கரைகளில் முன்னெடுக்கப்படும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

வலி. கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அக்கரை கடற்கரை மற்றும் வலி. வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட காங்கேசன்துறை கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, வலி. கிழக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட புத்தூர் 9ஆம் கட்டை வீதி தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள

அக்கரை மற்றும் காங்கேசன்துறை கடற்கரைகளில் முன்னெடுக்கப்படும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »

கீரிமலையில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி துரிதமாக அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு

கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். கீரிமலை பிரதேசத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, குறித்த பகுதி மிகவும்

கீரிமலையில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி துரிதமாக அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு Read More »

புதிய குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாரல் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

புத்தூர்–மீசாலை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளம், கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகள் மற்றும் உடுவில் குளம் ஆகியவற்றை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நீர்வளங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புத்தூர்–மீசாலை வீதியில் கிறீன் லேயர் அமைப்பால் புதிய குளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த இப்பணிகளை நேரில்

புதிய குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாரல் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »