மரக்கறி பயிர்ச்செய்கை வயல்விழா – முழங்காவில்

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் முழங்காவில் விவசாயப்போதனாசிரியர் பிரிவில், 2026ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் முன்னெடுக்கப்பட்ட மரக்கறிப்பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் நடைபெற்ற வயல்விழாவானது விவசாயப்போதனாசிரியர் செல்வன்.ஜெ.பிரதீப் தலைமையில் மோ.ராஜ்சுமன் என்பவரின் களத்தில் 18.09.2026 காலை 09.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி விவசாயப்பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்களான, பழப்பயிர் பாடவிதான உத்தியோகத்தர், மறுவயற்பயிர்ச்செய்கை பாடவிதான உத்தியோகத்தர், மகளீர் விவசாய விரிவாக்கம் பாடவிதான உத்தியோகத்தர் மற்றும் விவசாயப்போதனாசிரியர்களான ஜெயபுரம், பள்ளிக்குடா, வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம், இராமநாதபுரம் உத்தியோகத்தர்கள் முழங்காவில் கமநலசேவைத்திணைக்களத் தலைவர், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள், மகளீர் அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக்களத்தில் பூசணி, தக்காளி, கத்தரி போன்ற பயிர்ச்செய்கைகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பூசணி இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள், செய்கைமுறை மற்றும் அவற்றின் பழங்களின் தனித்துவமான பண்புகள் பயிர்முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்களும் பாடவிதான உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளின் கருத்துப்பகிர்வுடன், களப்பார்வை மேற்கொள்ளப்பட்டு விழா நிறைவுபெற்றது.