August 17, 2026

வயல் விழா – உருத்திரபுரம் நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடனான “யாய” முன்மாதிரி கண்ட நெற்செய்கை

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் – 2026 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட உருத்திரபுரம் குளம் சிறிய நீர்ப்பாசன குளத்தின் கீழான மாதாபுரி (சுவாமி கமம்) சிவன் வீதி உருத்திரபுரம் முகவரியில் உள்ள வயற் துண்டத்தில் நெற்செய்கையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட 50 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள “யாய” கண்ட முன்மாதிரித்துண்ட வயல் விழா 14.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் பிரதேச […]

வயல் விழா – உருத்திரபுரம் நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடனான “யாய” முன்மாதிரி கண்ட நெற்செய்கை Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர். இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். Read More »

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர்

யாழ்ப்பாணத்துக்கென்று தனித்துவமான உணவும் தனித்துவமான சுவையும் இருக்கின்றன. அந்தத் தனித்துவத்தை ருசிப்பதற்காக சுற்றுலாவிகளை நாம் வரவேற்கின்றோம். அதனை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுத் திருவிழா வெறுமனே ஒரு கொண்டாட்டமாக நின்றுவிடாது, யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கான மறைமுக அழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு விடுத்து நிற்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத்

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர் Read More »