April 2, 2026

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம்

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றின் கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிமேதகு […]

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம் Read More »

பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த தனியார் பேருந்தில் பயணித்த பயணியொருவரிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட

பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது Read More »

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ”Team Bison” அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride – Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார். ‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன்

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது Read More »

நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில்,

நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது. Read More »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நேற்று வெளியான 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று (01.04.2026) கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு நேரடியாகப் பயணம் செய்த கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோரைப் பாடசாலை அதிபர் திருமதி ஐ.நிமல்ராஜ் வரவேற்றார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். Read More »

ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை நிலையத்தை நிரந்தர கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டிசம் (Autism) மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் (Neurodevelopmental Disorders) உள்ள குழந்தைகளுக்கான ‘மாதவம்’ சிகிச்சை நிலையத்தை நிரந்தர உத்தியோகபூர்வமான கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் அதன் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்

ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை நிலையத்தை நிரந்தர கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »