December 2023

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானம்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் , கௌரவ ஆளுநரை இன்று (13.12.2023) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ, ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் […]

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானம் Read More »

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு.

அதிமேதகு ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பாராளுமன்ற சட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் அங்கத்தவர்கள், வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் நேற்று(09.12.2023) மாலை சந்தித்து கலந்துரையாடினர்.  உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, இடைக்கால செயலகத்தின் கொள்கை பிரிவு தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா, இடைக்கால செயலகத்தின் சட்டப்பிரிவு உத்தியோகஸ்தர் நிசாந்தெனி ரத்னம், உத்தேச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நிறைவேற்று அதிகாரியும்,  சட்டப் பிரிவு

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு. Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 நிகழ்வு சர்வதேச மண் தினமான 05.12.2023 செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற மண்தின நிகழ்வின்போது விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியிடப்பட்டதோடு சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 Read More »

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2023

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் நிகழ்வானது 04.12.2023 திங்கட்கிழமை அன்று கொழும்பு BMICH இன் தாமரை மண்டபத்தில் இடம்பெற்றது. 2022 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொதுநிர்வாக,

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2023 Read More »

அபயம் – வடக்கின் குறைகேள் வலையமைப்பு. குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் குறைகேள் வலையமைப்பினால், குறுகிய காலத்திற்குள் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை அபயத்திற்கு அறிவிப்பதன் ஊடாக ஒரு வாரத்திற்குள் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், சிறுவர், இளையோர் மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளை அரச பொறிமுறையின் ஊடாக அபயம் குறைகேள் வலையமைப்பினால்

அபயம் – வடக்கின் குறைகேள் வலையமைப்பு. குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு Read More »

இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைஇறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் ( 25,000) சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.  அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் கௌரவ ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த இருபத்தையாயிரம்( 25,000) வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் ம ற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காத எனினும், தகுதியுள்ள பயனாளிகள் இருப்பின் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் விண்ணப்பங்களை பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வடக்கு

இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைஇறுதி கட்டத்தை அடைந்துள்ளது. Read More »

கைத்தறி மற்றும் கைப்பணிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா – 2023

தொழிற்துறை திணைக்களத்துடன் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் கைத்தொழில் புடவை திணைக்களம் இணைந்து நடாத்திய கைத்தறி மற்றும் கைப்பணி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு தொழிற்துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 28.11.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இராமநாதன் வீதி, கலட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இனிய விருந்தினர்களாக திரு.இ.வரதீஸ்வரன் செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு வடமாகாணம் அவர்களும், அ.சிவபாலசுந்தரன் மாவட்ட

கைத்தறி மற்றும் கைப்பணிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா – 2023 Read More »

வட மாகாண வைத்தியசாலைகளிற்கு தாதியர் நியமனம்

தாதிய டிப்ளேமா பயிற்சி நெறியைப்பூர்த்திசெய்தவர்களிற்கான தாதிய நியமனங்கள் வகுப்பு 3 தரம் 0II ற்கு கடந்த 22 மற்றும் 27.11.2023 ந் திகதிகளில் சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு வடமாகாண சுகாதார திணைக்களத்தில் இடப்பெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து நியமனங்களை வழங்கி வைத்தனர். இந் நிகழ்;வின்போது வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.

வட மாகாண வைத்தியசாலைகளிற்கு தாதியர் நியமனம் Read More »

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2023

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் மரநடுகை மாதத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வானது 24.11.2023 ஆம் திகதியன்று காலை 10.30 மணியளவில் கோண்டாவில் மாநகர குடிநீர் விநியோக திட்ட வளாகத்தினுள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 100 தேக்கு மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஆர்.ரி.ஜெயசீலன் அவர்களும் அமைச்சின் உதவிச் செயலாளர்,அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர், மாநகரசபை உத்தியோகத்தர்கள்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2023 Read More »