August 2019

சங்கானை பிரதேச உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து 19 ஆகஸ்ட் 2019 அன்று உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் மிகவும் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடனும், உணவுகள் மிகவும் தரமற்ற தயாரிப்புக்கள் , உணவு தயாரிக்கும் சமையற்கூடங்கள் […]

சங்கானை பிரதேச உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக Chrysalis அரசசார்பற்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் வடமாகாண கைத்தறி நெசவு காட்சியகம் இல.505, பருத்தித்துறை வீதி நல்லூர் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில திறப்பு விழா வைபவம் ஆரம்பமானது. இவ் நிகழ்விற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்; நிகழ்விற்கு

கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா Read More »

வட மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அடப்பன் வீதி. மடத்தடி. யாழ்பாணம் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ம் திகதி காலை 9.15 மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் தலைமையில் ஆரம்பமானது. இவ் வைபவத்திற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களுடன், செயலாளர், பேரவை செயலகம் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும், மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி.அஞ்சலி சாந்தசீலன் அவர்களுடன், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்

வட மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் Read More »

வரி மதிப்பீட்டாளர் மற்றும் சாரதி ஆளணிக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட வரி மதிப்பீட்டாளர் (04) மற்றும் சாரதி (12) ஆகிய ஆளணிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 2019.08.16 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகண சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ .கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

வரி மதிப்பீட்டாளர் மற்றும் சாரதி ஆளணிக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல் Read More »

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மதசுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் திரு அகமட் சாஹிட் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 17 ஆகஸட் 2019 அன்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர்

கூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 17 ஆகஸ்ட் 2019 அன்று ஏற்பாடுசெய்த சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர் Read More »

வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது 14 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெற்றது. இவ் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு ஆகியன நெதர்லாந்து அரசின் இலகு கடன் உதவியுடன் உருவாக்கப்படவுள்ளன. சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதன்மை

வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது Read More »

பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர்

ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அடிப்படையாக இருக்கவேண்டிய பொருளாதார சுதந்திரம் வேண்டும். பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் எப்போதும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடக்கிற்கான சர்வதேச நீர்வள மாநாட்டிற்கான இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் அவர்கள் தலைமையில் 16 ஆகஸ்ட் 2019 அன்று மாலை இடம்பெற்றது. 2030 ஆம் ஆண்டளவில் எமக்கு குடிநீர் தேவையாக தண்ணீரீன்

பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர் Read More »

ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏ9 வீதியில் பயணிகள் பேரூந்துகள் மீது திடீர் சோதனை நடவடிக்கை

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏ9 வீதியில் பயணிக்கும் யாழ் – கொழும்பு மற்றும் கொழும்பு – யாழ் பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் நலன்கருதி நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் சுமார் 50 பேரூந்துகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது காலாவதியாகிய வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட வாகன

ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏ9 வீதியில் பயணிகள் பேரூந்துகள் மீது திடீர் சோதனை நடவடிக்கை Read More »

“மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா”

“TOM E JC மாமரங்களின் விளைச்சலை அதிகரித்தல்” எனும் நோக்கில் “மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா” 09.08.2019 ஆம் திகதி  அன்று அடம்பன் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள இத்திக்கண்டல் எனும் கிராமத்தில் அடம்பன் விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் பாடவிதான உத்தியோகத்தர் (பழப்பயிர்கள்), உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என

“மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா” Read More »