வரி மதிப்பீட்டாளர் மற்றும் சாரதி ஆளணிக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட வரி மதிப்பீட்டாளர் (04) மற்றும் சாரதி (12) ஆகிய ஆளணிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 2019.08.16 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகண சபை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ .கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.