விவசாய அமைச்சு

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை

புவிசார் இடம் அறியும் முறமையினைப் பயன்படுத்தி பயிர்உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் கொவிபொல தொடர்பான பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 14.03.2019 ஆம் திகதி புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் (Global Positioning System) மற்றும் கொவிபொல (Govipola) தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்டது. மேற்படி இரு பயிற்சிப் […]

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை Read More »

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சம்பந்தமான வயல்விழா 15 மார்ச் 2019 அன்று வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் பதில் உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள், வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இவ்வயல்விழாவில் பங்குபற்றியிருந்தனர். வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையின் பண்ணை முகாமையாளர் அவர்கள் நெற்பயிர்ச் செய்கையில்

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா Read More »

வடமாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல் சேகரிப்பும் ஆய்வும்

வடமாகாணத்தில் விவசாயத்துறை தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காகவும் ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான கசோக் சிராய் (சந்தை நோக்கிய விவசாய நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி) மற்றும் JICA நிறுவனத்தின் சிரேஸ்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி.ஏ.செனவிரட்ன ஆகியோர் 08.03.2019 ஆம் திகதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினருடன் ஏறத்தாழ 03 மணித்தியாலங்கள் கலந்துரையாடி தேவையான விவசாயம்சார் தகவல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

வடமாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல் சேகரிப்பும் ஆய்வும் Read More »