நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா
நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சம்பந்தமான வயல்விழா 15 மார்ச் 2019 அன்று வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் பதில் உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள், வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இவ்வயல்விழாவில் பங்குபற்றியிருந்தனர். வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையின் பண்ணை முகாமையாளர் அவர்கள் நெற்பயிர்ச் செய்கையில் […]