மகளிர் விவகார அமைச்சு

வட மாகாண சர்வதேச கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தக மன்றமும் நிகழ்வு

வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலில் தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான வெளிநாட்டு சந்தைவாய்ப்பு  தொடர்புகளை ஏற்படுத்தும் முகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சி கடந்த 31.10.2019 காலை 9.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது வட மாகண ஆளுநரின் செயலாளர் திரு.S. சத்தியசீலன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான  மலேசியாவின் உயர்ஸ்தானிகர் Mr. Tan Yang Thai மலேசிய இலங்கை வர்த்தக சபைத் தலைவர் Dato. S.குலசேகரன், மகளிர் விவகார […]

வட மாகாண சர்வதேச கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தக மன்றமும் நிகழ்வு Read More »

சர்வதேச முதியோர் வார விழா -2019

சர்வதேச முதியோர் வார விழாவானது ‘வயதுச் சமத்துவத்திற்கான பயணம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தில்; 01.10.2019 (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் 07.10.2019 (திங்கட்கிழமை) வரை தொடர்ந்து 07நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவானது அரச முதியோர் இல்ல முதியோர்கள் மற்றும் முதியோர் அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் கைதடி அரச முதியோர் இல்ல மூத்தோருக்கான விளையாட்டுப்போட்டி, சமூகத்தில் மூத்தோருக்கு சேவையாற்றுவோர் மற்றும் முதியோருக்கு சேவையாற்றும் நிறுவனங்களை கௌரவித்தல்

சர்வதேச முதியோர் வார விழா -2019 Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் குருநகர் மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு சிரட்டைசார் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும் ‘குருநகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்’, குருநகர் மேற்கு அவர்களுக்கு அவர்களின் உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.99,111.50 பெறுமதியான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அமைச்சு அலுவலகத்தில் 2019/09/24 ஆம் திகதி சங்க உறுப்பினர்களிடம்

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தும்பளை மேற்கு மற்றும் வல்லிபுரம், புலோலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பனைசார் பொருட்களின் உற்பத்தி மற்றும் பலகார வகைகளைச் செய்யும் ‘திருமால் மகளிர் செயற்பாட்டுக்குழு’, வல்லிபுரம், புலோலி அவர்களுக்கு ரூபா.178,591.50 பெறுமதியான இயந்திரங்கள், பாத்திரங்கள் மற்றும் தளபாடங்களும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் செய்யும் ‘அபிராமி சமூகமட்ட மகளிர் அமைப்பு’, தும்பளை மேற்கு, பருத்தித்துறை அவர்களுக்கு

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு Read More »

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

பேண்தகு கூட்டுறவு வங்கி முறைமையின் ஊடாக வடக்கு மாகாண மக்களின் பொருளாதார வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கைதடி முதியோர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைமையகக் கட்டடம் 30.08.2019 வெள்ளிக்கிழமை வடக்குமாகாண ஆளுனர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் உத்தியோக பஸ்ரீர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால்

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஜனாதிபதி திறந்து வைத்தார் Read More »

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தையிட்டி பகுதியைச் சேர்ந்த ஒன்பது  பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் உள்ளடங்களாக பத்து அங்கத்தவர்களைக் கொண்டு மணப்பெண் அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினை சார் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும்  பனிமலை மாதா  மகளிர் விவகாரக் குழு, தையிட்டி கிழக்கு, தெல்லிப்பளை என்ற அமைப்பிற்கு  அவர்களின்  உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.200,185 பெறுமதியான இயந்திரங்கள்  மற்றும்  உபகரணங்கள்

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் Read More »

கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக Chrysalis அரசசார்பற்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் வடமாகாண கைத்தறி நெசவு காட்சியகம் இல.505, பருத்தித்துறை வீதி நல்லூர் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில திறப்பு விழா வைபவம் ஆரம்பமானது. இவ் நிகழ்விற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்; நிகழ்விற்கு

கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா Read More »

வட மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அடப்பன் வீதி. மடத்தடி. யாழ்பாணம் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ம் திகதி காலை 9.15 மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் தலைமையில் ஆரம்பமானது. இவ் வைபவத்திற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களுடன், செயலாளர், பேரவை செயலகம் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும், மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி.அஞ்சலி சாந்தசீலன் அவர்களுடன், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்

வட மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் Read More »

பனை எழுச்சி வாரம் கொண்டாட்டங்கள்

பனை எங்கள் சூ ழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம் என்ற தொனிப் பொருளில் பனை மான்மிய நிகழ்வு மிகவும் விமர்சையாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில் 22.07.2019ம் திகதி தொடக்கம் 28.07.2019ம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெற்றது. முதலாம் நாள் (22.07.2019) ஆரம்ப நிகழ்வுகள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் திரு பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு

பனை எழுச்சி வாரம் கொண்டாட்டங்கள் Read More »

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கீழ்வரும் சிறுகைத்தொழில் போதனாசிரியர் மற்றும் விற்பனை முகாமையாளர் பதவிகளுக்கான நியமனம் வழங்கல்

தொழிற்றுறைத் திணைக்களத்திற்கு சிறு கைத்தொழில் போதனாசிரியர்கள் ஆறு பேருக்கும் ஒரு விற்பனை முகாமையாளர் பதவிக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களினால் 2019.05.15 ஆம் திகதி (புதன்கிழமை) பிரதம செயலாளர் செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் திருமதி. ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திரு. இ.பத்மநாதன், பிரதிப் பிரதம செயளாலர் – நிதி, திரு.ப.காண்டீபன், கணக்காளர், தொழிற்றுறைத் திணைக்களம், வடக்கு மாகாணம் ஆகியோர்

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கீழ்வரும் சிறுகைத்தொழில் போதனாசிரியர் மற்றும் விற்பனை முகாமையாளர் பதவிகளுக்கான நியமனம் வழங்கல் Read More »