ஆளுநர்

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் இன்று (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவு பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு Read More »

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 1500 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவர்களை மீள் குடியேற்றுவதற்கான உரிய

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் Read More »

எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். – அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (25/06/2024) திறந்து வைத்தார். அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்த கௌரவ ஆளுநர், உணவகத்தின் விற்பனை செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்ததுடன், வலிகாமம் மேற்கு பகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைத்தார். உள்ளூர் கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்

எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். – அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (25/06/2024) திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய  சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கான  தகவல்  தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு Read More »

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்புவிழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார்.

நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஏற்பாட்டில் தனியார் விடுதியொன்றில் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் நெல்லியடியை சேர்ந்த 15 வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்வி, மருத்துவம், சமயம், சமூக சேவைகளில் ஈடுபடும் 04 சான்றோர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான நினைவு கேடயங்கள் கௌரவ ஆளுநரால் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் நெல்லியடி பகுதியை சேர்ந்த 12 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.    

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்புவிழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார். Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்று (19/06/2024) நிறைவடைந்தது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இந்த முகாம்  நிறைவுறுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களும், யாப்பாணத்திற்கான  இந்திய துணை தூதுவரும் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் முறையினை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செயற்கை அவயங்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தை

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது Read More »

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உரித்து தேசிய வேலை திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்  இன்று வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு (16/06/2024) நடைபெற்றது. இதன்போது 442  பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு Read More »

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி இலக்குகளை உரியமுறையில் அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் (16/06/2024) நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மடு தேவாலயத்திற்கு

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் Read More »

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும்  ஜனாதிபதி கூறியுள்ளார். மன்னார் நகரசபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) மாலை நடைபெற்ற மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.    

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது Read More »

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்,  இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட்  நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம்

யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல் Read More »