பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (07/06/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் , எதிர்கால திட்ட முன்மொழிவுகள், […]
