ஆளுநர்

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் வடக்கு மாகாணஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் 12.03.2025 அன்று புதன் கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கு பெருந்தொகை வேலை வாய்ப்பு […]

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் வடக்கு மாகாணஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாணஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டது.

மனிதவளம் மற்றும் பௌதீகவளம் என்பன முழுமையாக கிடைத்தால் மாத்திரம் கல்வியில் மேம்பாடு அடைய முடியாது. எல்லோரதும் அர்ப்பணிப்பு முக்கியம். மாணவர்கள் ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் மாத்திரமே முன்னிலைக்கு வரமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாணஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

போகஸ்வெவ மகா வித்தியாலத்தில்அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

எமது மாகாணத்துக்கு தென்மாகாணங்களிலிருந்து வரும் சிங்கள ஆசிரியர்களும் இடமாற்றங்களைக் கோருகின்றனர். இதனால் இங்குள்ள மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலைமை நீடிக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு கற்கும் மாணவர்கள் இந்தப் பிரதேசத்துக்கே ஆசிரியர்களாக வரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா தெற்கு கல்வி வலயத்திலுள்ள போகஸ்வெவ மகா வித்தியாலத்தில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி 12.03.2025

போகஸ்வெவ மகா வித்தியாலத்தில்அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் திடீர்ப் பயணம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திலுள்ள அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 12.03.2025 அன்று புதன் கிழமை திடீர்ப் பயணம் மேற்கொண்டார். பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலையில் 2015ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட கட்டடம் இன்னமும் நிறைவுறுத்தப்படவில்லை என பாடசாலைச் சமூகத்தால் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக வேறு அபிவிருத்தி உதவிகளும் கிடைக்கவில்லை எனவும்

அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் திடீர்ப் பயணம் Read More »

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை சாரதிகள் சங்கத்தினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 11.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர். இதன்போது, வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் சுகாதாரத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க ‘1924’ என்ற ஹொட்லைன் அறிமுகம்

‘1924’ என்ற ஹொட்லைன் இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை எவரும் முன்வைத்த தீர்வுகளை மேற்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளரும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான ஜயந்த விஜயரட்ண தெரிவித்தார். அத்துடன் அஸ்வெசும திட்டத்தின் நடைமுறையாக்கத்தில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணமே சிறப்பாகச் செயற்படுகின்றது எனவும் பாராட்டினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்,

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க ‘1924’ என்ற ஹொட்லைன் அறிமுகம் Read More »

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஊடான சான்றிதழ் கற்கைநெறிகளை ஏனைய மாகாணங்கள் பயன்படுத்துவதைப்போன்று எமது வடக்கு மாகாணம் பயன்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எமது மாகாணத்தைச் சேர்ந்த இளையோரும் இந்தக் கற்கைநெறிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம், நாச்சிமார்கோவிலடியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் 11.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Read More »

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை ஆளுநர் பார்வையிட்டார்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 08.03.2025 அன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்றுவருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இந்த வீதியே இருந்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டினர்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை ஆளுநர் பார்வையிட்டார். Read More »

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் நேற்று சனிக்கிழமை (08.03.2025) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மருத்துவர் க.உதயசீலன் தலைமையில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆர்.விஜயகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய ஆளுநர், எங்கு ஆர்வம் – விருப்பம் இருக்கின்றதோ அங்கு வெற்றி – முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுக் கழகமாக

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. Read More »

சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் நான் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் இங்கிருந்த பெண்கள் அமைப்புக்கள்தான் பல திட்டங்களை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் செயற்படுத்தியிருந்தன. நியாப் திட்டத்தின் கீழான கடன் வழங்கலாக இருந்தாலும் சரி எந்தவொரு விடயமாக இருந்தாலும் சரி பெண்கள் தலைமைத்துவத்தை ஆளுமையாக வழங்கி அதைச் செய்திருந்தார்கள். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார். சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08.03.2025) நடைபெற்றது.

சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது Read More »