ஆளுநர்

இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

அரசாங்கத்துக்கு தவறான தகவல்களை வழங்கி சில திணைக்களத்தின் அதிகாரிகள் செயற்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதனால் வடக்கு மாகாணம் பெருமளவு பாதிப்பை இன்றும் எதிர்கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டார். இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஆளுநர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியத் தூதுவருக்கு சுட்டிக்காட்டினார். முதலில், மக்களின் மீள்குடியமர்வு மற்றும் காணிகள் விடுவிப்புத் […]

இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த செவ்வாய்க்கிழமை (20.05.2025) ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற திருமதி தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் நான்காவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்பாடி சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு

இன்றைய பிள்ளைகள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர். அத்தகைய பிள்ளைகளுக்கு இவ்வாறு சதுரங்கத்தைப் பழக்கி போட்டியில் பங்குபற்றச் செய்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். சதுரங்கம் விளையாடுவதால் மூளை வளர்ச்சியடைகின்றது. அதை ஊக்குவித்த பெற்றோரை வாழ்த்துகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்பாடி சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.05.2025 அன்று திங்கட்கிழமை பிரதேச செயலர்

யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் நான்காவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்பாடி சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு Read More »

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும்

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும் அம்பலவாணர் கலையரங்கில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பேராசிரியர் கா.குகபாலன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் புங்குடுதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயத்திலிருந்து விருந்தினர்கள் சகிதம் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் நிகழ்வு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த நூறு மாணவர்களால் மலர்மாலை அணிவித்து

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும் Read More »

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்தில் உயர்பதவிகளில் அமரப்போகும் இன்றைய மாணவர்கள், கல்விக்கு மேலதிகமாக தங்கள் தலைமைத்துவப்பண்புகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்துக்கு தேவையானவர்களாக நீங்கள் மாறமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’

உயர் பதவிகளில் இருக்கும் பலரிடம் இன்று தலைமைத்துவப் பண்பைக் காணவில்லை. இதனால் மக்களுக்கு அரசாங்கச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கு மாகாணத்துக்குரியது மாத்திரமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரிய பிரச்சினை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’ என்னும் தலைப்பில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’ Read More »

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’

அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற உண்மையைச் சொல்லும் காப்பியங்களை, இந்தத் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிலப்பதிகார விழாக்களை நடத்தும் அகில இலங்கை இளங்கோ கழகத்தை பாராட்டுவதுடன் இந்தப் பணிகளை தொய்வின்றி எடுத்துச் செல்லவும் அவர்களை வேண்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’ துன்னாலை வடிவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. 24.05.2025 அன்று சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள்

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’ Read More »

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் தமிழ்ச் சைவப்பேரவையினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 24.05.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்தச்

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது.

நான் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசியப் பாடசாலையான முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் து.யேசுதானந்தர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025)

மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது. Read More »

யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம்

முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். ஆளுநர் அவர்களை, பாடசாலை அதிபர் வரவேற்றதுடன் பாடசாலையைச் சுற்றிக் காண்பித்தார். யோகபுரம் மகாவித்தியாலயத்தில் மிகப் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள மரம் நடுகை மற்றும் தென்னங்கன்றுகள் நடுகை ஆகியனவற்றை ஆளுநர் பார்வையிட்டதுடன், இந்தச் செயற்பாட்டுக்காக பாடசாலைச் சமூகத்துக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம் Read More »