கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை ஆளுநர் பார்வையிட்டார்.
கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 08.03.2025 அன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்றுவருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இந்த வீதியே இருந்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டினர். […]
