“மத்திய அரசின் மேலதிக நிதியைப் பெற இப்போதே தயாராகுங்கள்” – வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்த முக்கிய பணிப்புரை!
வடக்கு மாகாணத்தின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வழமையான மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்கு அப்பால், மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்தும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இப்போதே திட்டங்களைத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, […]
