யாழ். பல்கலைக்கழகம் என்பது வடக்கு மாகாணத்தின் செழுமையான கல்வி மரபை பிரதிபலிக்கும் உயிரோட்டமான சின்னமாகவும், பிராந்திய வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும் விளங்குகிறது. – கௌரவ ஆளுநர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50ஆண்டுகளில் அரைவாசிக் காலப் பகுதியை இங்கு மூண்டிருந்த போரினுள்ளேயே கழித்தது. மிகவுப் பயமான – மோசமான அந்தச் சூழலை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அப்படிப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவன் என்ற ரீதியில் நான் பெருமை கொள்கின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட […]
