சவால்களைக் கடந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்” – இணையவழி கற்றல் மீளாய்வுக் கூட்டத்தில் ஆளுநர் வலியுறுத்தல்
வடக்கு மாகாணத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இணையவழி கற்றல் செயற்பாடுகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) மாலை, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி மேற்பார்வையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப மற்றும் வள ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாணம் […]
