ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலைய பிரதம பிரதிநிதிக்கும், வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது
வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் பிரதம பிரதிநிதி (Country Director) கென்ஜி குரோனுமாவுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (21.01.2026) மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஜெய்க்கா நிறுவனம் கடந்த காலங்களில் […]
