நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர்
ஒரு சமுதாயம் முன்னேறவேண்டும் எனில் அந்த சமுயதாயத்தின் அடிப்படை நியாயமானதும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்ற பாரிய கொள்கை இருக்கவேண்டும் . நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கார்கில்ஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்கான கார்கில்ஸ் சாரு பிமா உழவர் சமூக நன்மை மற்றும் உதவித்தொகை வழங்கும் 2018 -2019 நிகழ்வு 04 ஒக்ரோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் இடம்பெற்றறது. […]
