ஆளுநர்

மன்னார் மறைமாவட்ட ஆயர் , ஆளுநர் சந்திப்பு

 ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 25 யூன் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு -NP governors Media

மன்னார் மறைமாவட்ட ஆயர் , ஆளுநர் சந்திப்பு Read More »

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம்

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 24 யூன் 2019 அன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறு மரத்தடியில் கல்விகற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட ஆளுநர் அவர்கள், கல்வியூடாக உலகத்தின் எந்தவொரு உயரத்தினையும் எட்டிப்பிடிக்க முடியுமெனவும் கல்வியினை இடைவிடாது தொடர்ந்து சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக மாறி பாமர

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம் Read More »

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இதுதொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததனையடுத்தே குறித்த பாடசாலையின் அதிபரை

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு Read More »

ஆளுநரின் வழிப்படுத்தலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம்

வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக தேசிய தொழிற் தகமை (NVQ) மட்டம் 3 அல்லது 4 வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி ஐநூறு (500), மன்னார் ஐநூறு (500) , முல்லைத்தீவு ஐநூறு (500) , வவுனியா ஐநூறு (500)

ஆளுநரின் வழிப்படுத்தலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம் Read More »

உங்களை பாதுகாப்பதும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது – ஆளுநர்

வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் நேற்று கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் யாழ் இந்தியத்துணைத் தூதரகம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து இன்று (21) ஏற்பாடு செய்த உலக யோகா தின நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்வில் ஆளுநர்

உங்களை பாதுகாப்பதும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது – ஆளுநர் Read More »

வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எல். இளங்கோவன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம் Read More »

ஆளுநரின் புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண ஆளுநரின் புதிய  செயலாளராக சி.சத்தியசீலன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால்  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் புதிய செயலாளர் நியமனம் Read More »

ஊழல் புரியும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் – ஆளுநர்

இலஞ்ச ஊழல் புரியும் அனைத்து உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண அரச சேவையில் இலஞ்ச ஊழலை ஒழிக்கும் முகமாகவும் இது தொடர்பான விழிப்புணர்வினை அரச அதிகாரிகள் , ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் கௌரவ ஆளுநரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வித்துறையின் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான ஆரம்ப விழிப்புணர்வு செயற்திட்டம்

ஊழல் புரியும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் – ஆளுநர் Read More »

ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் .ஜோயர்ன் சோரென்சென் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களுக்கு விபரிக்கப்பட்டது. போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதேவேளை, வடமாகாண மக்கள்

ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

வவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் – ஆளுநர் சந்திப்பு

வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 19 யூன் 2019 அன்று பிற்பகல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளின் தற்போதைய நிலைமைகள் , அவற்றினூடாக முன்னெடுத்துள்ள மக்கள் நல செயற்பாடுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் போது முகம்கொடுக்கும் சவால்கள் , பிரச்சனைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர்

வவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் – ஆளுநர் சந்திப்பு Read More »