ஆளுநர்

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021

வட மாகாணத்தில் கடந்த இரு வருட காலப்பகுதியில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையிலும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழும் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான அறிவித்தலை வழங்கும் நோக்கில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் கடந்த புதன் கிழமை (29 .9 .2021 ) மதியம் வடமாகாண […]

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021 Read More »

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது.

நேற்றைய தினம் (2021.09.09) யாழ் மாவட்டத்துக்கான களவிஜயத்தை மேற்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் யாழில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டார். இவ் விஜயத்தின் போது, வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்ட தாளையடி தபால் நிலையத்திற்கான ஆவணத்தை கௌரவ அமைச்சர் அவர்கள் தபால்மா அதிபர் மதுமதி வசந்தகுமாரிடம் கையளித்தார்.

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. Read More »

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நடைமுறை நிலைமைகளை ஆராயும் கலந்துரையாடல் 27.07.2021 காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மூலோபாய நகர திட்டமிடலில் நிறைவடைந்துள்ள திட்டங்கள் தொடர்பான நிலைமை குறித்தும் குறித்த திட்டத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா

வவுனியா மாவட்ட மரக்காரம்பளைப் பிரதேசத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட பாற் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 15 யூலை 2021 அன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் தொழிற்சாலையை மீள ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்ததுடன் இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் விவசாயிகளுக்கான சந்தை

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா Read More »

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு15 யூலை 2021 அன்று மதியம் 12 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் களஞ்சியசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் இத் திட்டமானது கிராமப்புற

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு Read More »

கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி திறப்பு விழா வைபவம்

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி இன்று (15.07.2021) காலை 10.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த பெண்கள் விடுதி திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் திரைக்கல்லினை திரைநீக்கம் செய்து  கட்டடத்தொகுதியினை திறந்து வைத்ததுடன் குறித்த வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். குறித்த நிகழ்வில்   வடமாகாண 

கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி திறப்பு விழா வைபவம் Read More »

கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம்

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை மையம்  இன்று காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த சிகிச்சை நிலைய திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் திரைக்கல்லினை திரைநீக்கம் செய்து  கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் நேரடியாக பார்வையிட்டார். குறித்த நிகழ்வில்  வடமாகாண  சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு

கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம் Read More »

உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட்- 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முறையே அச்சுவேலி பிரதேசத்திலும், குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் அன்று 14.07.2021 காலை இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் வெங்காய களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை அச்சுவேலி பிரதேசத்திலும், உருளைக்கிழங்கு

உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள்  14.07. 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கௌரவ ஆளுநர் அவர்கள் யா/திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம், கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் மற்றும் யா/கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வட மாகாணத்தில்

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது Read More »

ஆயுர்வேத வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல்

வடமாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகள் மற்றும் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 28 யூன் 2021 அன்று காலை 11மணிக்கு இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களும் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்தியர்களின் பிரதிநிதிகள், அடிப்படை வசதியற்று இயங்கிக்கொண்டிருக்கும் வைத்தியசாலைகளின் பிரச்சனைகள், சேவைப்பிரமாணக் குறிப்பிலுள்ள பிரச்சனைகள், ஆளணி தொடர்பான

ஆயுர்வேத வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல் Read More »