பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நேற்று (05/05/2024) நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான விடயமாக காணப்படுவதாக இதன்போது உரையாற்றிய வடக்கு […]
