ஆளுநர்

சௌபாக்கியா கடன்திட்டம் 2021

அரசாங்கத்தின் சௌபாக்கியா இலகு கடன் திட்டத்திற்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்ட எட்டு பலநோக்கு சங்கங்களுக்குரிய கடன் வழங்கும் திட்டம் 13 பெப்பிரவரி 2021 அன்று வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள்இ வரலாற்றில் முதற்தடவையாக பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு நெற்கொள்வனவு செய்வதற்காக பெரியளவு தொகை மிகக் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]

சௌபாக்கியா கடன்திட்டம் 2021 Read More »

வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும்

கமத்தொழில் ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு சஷீந்திர ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண கல்வித்திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து நடத்தும் வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் மற்றும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் கிளி/வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலையில் 15 பெப்பிரவரி 2021 அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ

வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் Read More »

பற்றிக்(Batik) பயிற்சி நிலையம் புங்குடுதீவில் திறந்து வைக்கப்பட்டது

“சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைக்கு அமைவாக “உழைக்கும் நாடு, உற்பத்தி செய்யும் குடிமகன், மகிழ்சியான குடும்பம்” என்ற தொனிப்பொருளில் 200 பற்றிக் கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட “பற்றிக் பயிற்சி நிலையம் -புங்குடுதீவு யாழ்ப்பாணம்” திறப்புவிழா மற்றும் ஆரம்ப நிகழ்வு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் பாராளுமன்ற

பற்றிக்(Batik) பயிற்சி நிலையம் புங்குடுதீவில் திறந்து வைக்கப்பட்டது Read More »

வடமாகாண கல்வித்துறைசார் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

வடமாகாணகல்வித்துறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சிமாவட்ட யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் 05 பெப்பிரவரி 2021 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கௌரவ கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி வலயம் இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டமைக்கான அனுமதிக்கடித்தினையையும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு திறன் வகுப்பறை இற்கான கொரியநாட்டின் அன்பளிப்பான 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுக்குரிய காசோலையையும் கௌரவ அமைச்சர் கௌரவ வடமாகாண ஆளுநரிடம் கையளித்தார். இவ்விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு, வடமாகாண கல்விதுறைசார்

வடமாகாண கல்வித்துறைசார் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல். Read More »

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வானது இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலக 73வது சுதந்திர தின கொண்டாடம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், நீண்டகாலத்திற்கு பின் ஒரு மாவட்டத்தின் சுதந்திர தின நிகழ்வில் தனக்கு பங்குகொள்ள

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம் Read More »

“ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான “ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது யாழ் நெடுங்குளம் கிராமத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், யாழ்ப்பாண அரச அதிபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் நண்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் பிரதேச செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின்

“ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்டம் -2021

2021ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது 02 பெப்பிரவரி 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கயன் இராமநாதன் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கொவிட்-19 சுகாதார நடைமுறை விதிகளுக்கமைய இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்டம் -2021 Read More »

வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 27 ஜனவரி 2021 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், பிரதி பிரதம செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், தொழில்நுட்ப சேவையின் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்து கருத்து

வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »

கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்புவிழா

மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி  திறப்புவிழா நிகழ்வு 26.01.2021 அன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதியை திறந்துவைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் மாணவர் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், கிராமப்புற பாடசாலைகளுக்கான வளப்பற்றாக்குறை, வளப்பங்கீடு என்பதுதான் மாகாணசபையில் தற்போது முதன்மை பெறுகின்றது. அந்த வகையில் கிராமப்புற

கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்புவிழா Read More »

யா/கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா

2019 ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  யா/கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறை கட்டடத்தொகுதியின் திறப்புவிழா நிகழ்வு 26.01.2021 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் சுபமுகூர்த்த நேரத்தில் வகுப்பறை கட்டட தொகுதியை திறந்து வைத்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்ததுடன் பலரையும் ஆதரித்த பிரதேசமாக காணப்படும் இப்பிரதேசத்தின்

யா/கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா Read More »