ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழு, இலங்கை சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள் 11.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்திலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களை தடுக்கும் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சுங்க திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை […]

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு Read More »

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 04.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகளின்

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »

வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு வடக்கிலேயே பால் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களிலிருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவரும் நிலையில், வடக்கில் பால் தொடர்பான உற்பத்திப்பொருட்களுக்கு பசுப்பாலை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ், இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சிறீ ராகேஷ் நட்ராஜ் உட்பட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வடக்கில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கிராமியக்கைத்தொழில் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,

வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு வடக்கிலேயே பால் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். Read More »

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8360 மெற்றிக் தொன் யூரியா இரசாயன உரத்தை இலவசமாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் 10.08.2023 அன்று சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் ஆரம்பமானது. வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிட்கி தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பால்

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். Read More »

உள்ளூராட்சி அதிகாரசபைகளுடனான கலந்துரையாடல்

மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 24.05.2023 (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி அதிகார சபைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தொழிற்பாடுகள், சபை வீதிகள், சபை வருமானங்கள், சோலைவரி அறவீடுகள் மற்றும் நிலுவைகள், மன்றங்களின் செயலாற்றுகை மதிப்பீடு, கழிவு முகாமைத்துவம், சத்துணவு வழங்கல், டெங்கு ஒழிப்பு, சிறுவர் பூங்கா பராமரிப்பு,

உள்ளூராட்சி அதிகாரசபைகளுடனான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம்

சீனத் தூதுவர் ஷீய் ஷன்ஹொங் இலங்கையின் வட மாகாணத்திற்கான தனது முதல் விஜயத்தை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்து ஆரம்பித்தார். சீனத் தூதுவர் வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், இதன் சேகரிப்பை பெரிதாக்கவும் வழங்கப்பட்டது

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் Read More »

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் தீபாவளிக்கு தீபங்களின் வரிசை என்பது பொருளாகும். உலகில் உள்ள சகல இந்துக்களும் இத்தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பண்டைய காலத்திலிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன ஒரு கொண்டாட்டமாகும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து ஒளிமயமான வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்று தீபங்களால் எம் மனங்களில் விளக்கேற்றுவோம்.

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (11. 10. 2021) காலை 10 மணியளவில்  மெய்நிகர் செயலி ஊடாக  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், பிரதம செயலாளர் ,வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் ,மற்றும் கல்வித் துறைசார் பணிப்பாளர்கள் இணைந்திருந்தனர்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

யாழ் மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு அமைவாகவும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலில் மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நயினாதீவு கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம், தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் மற்றும் யாழ்-கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் இன்று (06.10.2021) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நிகழ்வை மாண்புமிகு பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இணையவழி மெய்நிகர் தொழில்நுட்பம்

யாழ் மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்  இன்று (05.10.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில்    கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள் ஆளுநர் செயலகத்திலிருந்து இணைந்திருந்தார். இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு  வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இம்மாதம் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1-5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல் Read More »