ஆளுநர்

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், மக்களின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புகளை ஒழுங்கமைக்க ஐக்கிய நாடுகள் சபை பூரண ஆதரவை வழங்கும் எனவும் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் அவர்களை 05.06.2023 மாலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் நல்வாழ்வு தொடர்பில் திருப்திகரமான போக்கு காணப்படுவதாகவும், […]

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். Read More »

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா பெருமையுடன் ஆரம்பமாகின்றது

வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் 06.09.2023 அன்று காலை ஆரம்பமானது. வடமாகாணத்தில் உள்ள 651 பாடசாலைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கோட்டமட்ட மற்றும் வலயமட்ட வெற்றிகளின் பின்னர் மாகாண விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 5000 விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா பெருமையுடன் ஆரம்பமாகின்றது Read More »

“இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) ஏற்பாட்டில் நடைபெற்ற “இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை அமைப்பு குழுவில் வடமாகாண ஆளுநர் கெளரவ திருமதி பி.எஸ்.எம் சார்லஸ் பங்குபற்றியிருந்தார்.

“இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை Read More »

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்

கடந்த 25.08.2023 அன்று, 133 வது தொல்லியல் தினத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் சேவையாற்றும் அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச வங்கிகளுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டு வீர வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துவோர் சங்கம் 31 ஆகஸ்ட் 2023 அன்று கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் திரு ஒலிவர் பிரஸ் (OLIVIER PRAZ) தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய வந்த அவர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 23.08.2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண மக்களின் பொதுவான

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு. Read More »

வடமாகாண மக்களின் வாழ்க்கை பற்றி அறிய அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

தற்போதைய வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை தாம் வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. ஜூலி ஜே சங் கூறினார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் 23 ஆகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள்

வடமாகாண மக்களின் வாழ்க்கை பற்றி அறிய அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம் Read More »

சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

சென்னையிலிருந்து ஜூன் 16 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் கோர்டிலியா உல்லாசப்பயணக்கப்பலில் வந்து செல்லும் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் 21 ஓகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய துணைத்தூதுவர், வடமாகாண துறைமுக அதிகாரசபை தலைவர், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலகர்,

சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »

ஆளுநரின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டம்

வடக்கு மாகாணத்தலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக 21 ஆகஸ்ட் 2023 அன்று தமது விசேட வேலைத்திட்டங்களை நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆரம்பித்திருக்கின்றன. 21 ஆகஸ்ட் 2023 அன்று காலை 7 மணியளவில் நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட திருநெல்வேலிச்சந்தியிலே கழிவுத்தொட்டிகள் வைக்கும் நிகழ்வு ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை 7.30

ஆளுநரின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டம் Read More »

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் வைத்திய அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் 31.07.2023 அன்று கலந்துரையாடப்பட்டது. சேவை நாடுவோருக்கான சிகிச்சை, முகாமை மற்றும் புனர்வாழ்வு என்ற விடயங்கள் சுகாதார சேவை நிலையங்களில் ஒரே விதமாக நோக்கப்படலாகாது என்றும் அவை வௌ;வேறான முறைமைகள் ஊடாக அணுகவேண்டியவை என்பதை

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு Read More »