வடக்கு மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க அரச அலுவலர்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஆளுநரின் செயலாளர்
போரிலிருந்து மீண்டுவந்திருக்கும் மாகாணமாக வட மாகாணம் காணப்படுவதால் இங்குள்ள மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க வட மாகாணத்தின் அரச அலுவலர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்கள் வட மாகாணத்தின் அரச அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 04 பெப்பிரவரி 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 71ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஆளுநர் செயலக பணிக்குழாம் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். […]