ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும்
அரச நிறுவனங்களின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எண்ணிமைப்படுத்தல் (டிஜிட்டலைஷேஷன்) மூலம் ஊழல் மோசடிகளைக் குறைக்க முடியும். எனவே வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் இந்தச் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை (19.09.2025) […]